My Blog List

Saturday, October 31, 2020

ரௌத்திரம் பழகு

நிறப் பிரிவினை 

நிறங்கள்

தம்முள் ஏற்றத்தாழ்வுகள்

பார்ப்பதில்லை!! 

காணும் கண்களும்

பாரபட்சம் பார்ப்பதாய் தெரியவில்லை!! 

ஆக,

ஊனமுற்று இருப்பது

மனித மனங்களே!! 

பிரிவினை வாததின்

கொடூரப் பிடியில்

சாதி மத இன வரிசையில்

நிறங்களும்......


@perawritings 


Friday, October 30, 2020

Walk with lanka

Restaurants in kandy 

3. Cafe the vibe

The selected comments about "Cafe the vibe" from Random people.

One of the wonderful cafe located in Kandy town. It’s exactly situated just near to the Trinity College, Kandy. Nice small place. But they provide excellent service. Run by a young crew with great enthusiasm. They are friendly and helpful.
 

The food is a bit pricey but totally worth it. Good customer service and  food items are tasty & delicious. Good for personal as well as family or group gatherings. We Highly recommend this place.

Our favorites are their burger, cheese kottu & virgin mojito.

Our rating  8/10















செந்தமிழே

நின்னவள்  தோழமை

அழகின் ஐஸ்வரியங்களை கோர்த்து பின்னி உருகொண்ட நங்கையவள்

தன் கண்ணாடி முன்னின்று

தன்னை தானே இரசித்துக் கொண்டிருந்தாள்!! 


தன் கண்களுக்குக் மட்டும் தான் 

அவள் அழகு புலப்படுவதாக மாயையில் ஆழ்ந்திருந்தாள்!!

அதனால்தான் ஏனோ

தனை தனிமைபடுத்தி

அழகை அழகாக காட்டும்

தன் நிலைகண்ணாடிகளை 

தன் உற்ற தோழமைகளாக ஏற்றிருந்தாள்!! 


ஒன்றை மட்டும் அவள் இன்றும் அறிய முற்படவில்லை!!

அந்த நிலைகண்ணாடிகளை தாண்டிய

தோழமை

என் கண்களுக்கும் அவளுக்கும்  உள்ளதென்று!!

@perawritings 

ரௌத்திரம் பழகு

 எங்கே செல்கின்றது மானிடம்

பசியால் அழுகின்றன

குழந்தைகள்!!

பாலால் நனைகின்றது

கல்லு!!

அரோகரா சொல்கின்றது

மானிடம்!!

காதை பொத்திக் கொண்டது 

தெய்வம் !!

#மடமை🖤


@perawritings 

Thursday, October 29, 2020

ரௌத்திரம் பழகு

இப்படிக்கு கடவுள் 

 கருங் கற்களுக்கும்

மண் கட்டிகளுக்கும்

போட்டோ பிறேம்களுக்கும்

பாலாலும் தேனாலும்

பட்சணங்களாலும்

பொய்யாக அர்ச்சித்து 

மறு நொடியே

எனக்கானவற்றை

நீங்களே உண்டு

கழிக்கின்றீர்கள்!! 


நான் மட்டும்

நீங்கள் மெய்யென நம்பும்

வாழ்க்கைக்கு

வானத்தில் இருந்து குதித்து

அருள் புரிய வேண்டுமா?? 


உங்கள் வியாபார உத்தி கண்டு

மெய் சிலிர்த்து போகின்றேன்!! 


மாயையின் பின் அலையும்

மானிடனே!!

பொய்யான அர்சித்தலை விடுத்து

உன் முகம் முன் தோன்றும்

உயிர்களை அன்பால் 

அர்சிக்கப் பழகு!! 


வாழும் உங்களில்

என்னை காண பழகுங்கள்!!

கருங்கற்களிலோ மண்கட்டிகளிலோ

போட்டோ பிறேம்களிலோ அல்ல!! 


                இப்படிக்கு,

                கடவுள்!!


@perawritings 

Wednesday, October 28, 2020

Photography today

Hemysphere🖤 

Photographer- Hemkumar



ரௌத்திரம் பழகு

பெண்ணியம் காப்போம்!!

கற்பு எனும் கற்பனை..


பெண்குழந்தைகளை வளர்த்தல் என்பது லேசுப்பட்ட காரியமல்ல.. ஒரு தந்தை தன் வாழ்நாள் அனுபவங்களினால் தனது மகளை எதற்க்கும் எதிர்கொள்நிலைக்கு மாற்றவும்.. தோதான அனுபவங்களை அவளை அடையச்செய்வதன் ஊடாக சமூகம் பற்றிய நேரான மறையான கருத்துக்களை அவள் உணரச் செய்யவும்.. அந்தத்தந்தை பகீரதபிரயத்தனம் செய்யவேண்டி இருக்கும்.. வெறுமனே கராத்தே கிளாசுக்கு விடுவதாலும் ஹமாம் சோப் வாங்கிக் கொடுப்பதாலும் அந்த மனதைரியம் வந்துவிடுமா என்ன..

ஒரு நாள் முழுக்க கூலி வேலை செய்து தனது மகளின் வயிற்றுப்பிழைப்பையும் கல்வித்தேவையையும்  மாத்திரமாவது நிவர்த்தி செய்யலாம் என்று தன்னை வருத்தும் ஒரு கூலித்தொழிலாளியிடம்.. தனது மகளுக்கான நல்லது கெட்டவற்றை அடையாளம் காட்டவும், சமூகத்தின் பார்வைகளுக்கும்  பாய்ச்சல்களுக்கும் ஏற்ப வளைந்து கொடுக்காமல் ஓடுவதற்க்கான நுட்பத்தையும் கற்ப்பிக்க நேரம் இருக்குமா.. அப்போதைய பொழுதுகளில் சில மறையான சந்தர்ப்பங்களுக்கு முகம் கொடுக்க நேரிடுகையில் அதற்க்கான முன்னாயத்தம் இன்றி சரியான எதிர்வினைகளை பிறப்பிக்கத் தவறுகையில்.. அந்தப் பெண் மீது "அவன் கூப்பிட்டா உனக்கு எங்க போச்சு அறிவு " போன்ற மொன்னைத்தனமான விவாதங்கள் சரி வருமா.. 

ஒரு குழந்தை எழும்பி நடக்கவும் ஓடவும் எழுதவும் வாசிக்கவும் வழிகாட்டிகள் தேவைப்படுவது போல சந்தர்ப்பங்களுக்கு ஏற்ப எதிர்வினையாற்றவும் சமூகத்திலிருந்து தப்பிப்பிழைக்கவும் கற்பிக்கப்படல் அவசியம்.. உலகம் இன்னும் முழுமையாக நாகரீகமாக்கப்படவில்லை என்பதே நிதர்சனம்.. வேண்டுமென்றால் விருத்தியடைந்த காடு என்று இதை விளம்பலாம்.. காட்டில் வாழ்வதைப்போலவே அதிகபட்ச முன்னாயத்தோடு சுயகரிசனையோடு இங்கே வாழப்பழக்கவேண்டும்.. [ இதில் தமிழ் எழுத்தாளர்களின் பங்கு மிக ஆழமானது.. வன்புணர்வாளர்கள்.. அவர்களை எதிர்கொண்ட நபர்களின் மனவெளிப்பாடுகள் தொடர்பான நிகழ்காலச்சித்திரங்களை அதிகபட்ச உண்மைத்தன்மையோடு அவர்கள் சமுகத்திற்க்கு அறிமுகப்படுத்தவேண்டும்..]

அனைத்துப் பெண்குழந்தைகளும் வளரும் சமுகம் சமனானது அல்ல.  அந்தந்த இடத்திற்கேற்ப சந்தர்பத்திற்கேற்ப எதிர்வினையாற்ற அவற்றிக்கு சொல்லிக்கொடுக்கப்பட வேண்டியது அவசியம்..

அதற்க்குத்தான் அதிகம் அதிகம் உங்கள் பிள்ளைகளை வாசிக்கப்பழக்குங்கள்.. பத்திரிக்கைகள்.. தரமான நேரான இலக்கியங்களை வாசிப்பதை அறிமுகப்படுத்துங்கள்.. மனம் விட்டு அதிகளவு சினேகபூர்வமாக அளவழாவுங்கள்.. வன்புணர்வு.. துஷ்பிரயோங்கள் பற்றிய நிகழ்கால உதாரணங்களை அறிமுகப்படுத்துங்கள்.. ஏதும் தவறான சிந்தைகள் வலுப்பெறின் அதை உணரவும் அதனினின்று மீளவும் வழி கூறுங்கள்.. மனதைரியம் தேவை அதைக் காட்டிலும் தன்னம்பிக்கை தான் தாக்குப்பிடித்தலின் முக்கிய பற்றுகோள் என்று உணர வையுங்கள்..

அவர்கள் உடல் மேல் அவர்களைத்தவிர வேறு எந்த நபரிற்கும் அதிகாரம் இல்லை என்றும்.. அந்த அதிகாரத்தை உரிமையை எவ்வாறு பேணலாம் என்றும் வகை கூறுங்கள்.. ஐயோ கற்பு போய்விட்டதே என்று பதறுவதை காட்டிலும் தனது உடலின் மீதான அதிகார மீறல் இன்னவரால் இந்நேரத்தில் ஏற்ப்பட்டது என சரியானவர்களிடம் அடையாளம் காட்டுவதனால் தண்டனைகளை பெற்றுக்கொடுக்கச் சொல்லிக் கொடுங்கள்..அதற்க்கு ஊக்குவியுங்கள்.. அதன் மூலமாக கற்பு என்னும் கற்பனையை பாதுகாக்கலாம் என்றும் உணர்த்துங்கள்.. தானாக அல்லாமல் வலுக்கட்டாயமாக கற்பை பறிக்க இயலாதென்றும்.. அந்த அடக்கு முறைக்கான பெயர் உடல் மீதான வன்முறை பிரயோகம் என்றும் உணர்த்துங்கள்..

இங்கே யாரும் உத்தமர்கள் இல்லை.. வேண்டுமானால் வருந்தித் திருந்தியவர்களாக இருக்கலாம்.. அல்லது கணநேரமும் தனது புனிதத்திற்க்கு களங்கம் வந்துவிடுமே என்ற ஆதங்கத்தில், தன் மேல் எப்போது வேண்டுமானாலும் சுமத்தப்பட தயாராக இருக்கும் அபாண்டத்திற்க்கு பதில் சொல்லவற்க்காக, தம்மை வாழ்நாள் முழுவதுமாக தயார்ப்படுத்திக் கொண்டிருப்பவர்களாக, தமது நிகழ்கால வாழ்க்கையைத் தொலைப்பவர்களாக இருக்கலாம்.. 

எந்தத்தவறுமே செய்யாத ஒருவர் சமூகத்தின் பால் பயந்து வாழ வேண்டி இருப்பதற்க்கான காரணமும்.. முற்றிலுமாக தவறுகளை மாத்திரமே இழைத்த ஒருவர் தனது அச்சத்தை தொலைத்து மேலும் புத்துணர்வுடன் தவறிழைக்கவும் எங்களது கலாச்சார கோட்பாடுகள் தான் முக்கிய காரணம்.. எதிர்வீட்டுக்காரன்.. எதிர்க்கடைக்காரன்.. புழங்கும் தெரு என குறிப்பிட்ட ஒரு சனத்தொகைக்குப் பயந்து கற்பு என்னும் கற்பனைக்காக உயிர்வெறுத்தல் என்பது எத்தனை அபத்தம்..

உண்மையில் விடயம் வெகு எளிது.. உங்கள் மாமிசத்திற்க்காக இரத்த வெறி பிடித்த ஒரு மிருகம் உங்களைச்சுற்றி வலம் வருகிறது.. அதை நையப்புடைத்து அடித்துக் கொல்வதா... அல்லது  அதன் முன் நிர்வாணமாக்கப்பட்டுவிட்டோமே என்னும் மன அங்கலாயப்புக்காக அதனிடம் சரணடைவதா.. முன் நிற்பது மிருகம் என்று அறியின் மானம் வெறுத்து அதன் குருதி கொணர்தலே மேல்... கற்பு என்னும் கற்பனையை உருவாக்கிவிட்டீர்கள்.. ஒன்று அதை சட்டை செய்யக்கூடாது.. அல்லது அதைக் காப்பாற்ற வாழ்நாள் முழுவதும் வழி செய்துகொண்டே இருக்கவேண்டும்.. இந்த இரண்டு வழிகளால் மாத்திரமே கற்பு எனும் வார்த்தைப் பிரயோகம் உங்கள் மேல் செலுத்தப் போகும் பிரம்மாஸ்திரத்தைத் தடுக்க இயலும்.

@perawritings 

Tuesday, October 27, 2020

செந்தமிழே

அம்மா - கவிதை வரிகள் 

தொப்புள்_கொடி_சொந்தம் 

கருவினில் உயிராகி

ஈரைந்து திங்கள் 

பத்திரமாய் எனை சுமந்து

கனவுகள் பல கண்டு

இமையாத விழிகளுடன்

வலிகளையும் துச்சமென

எதிர் கொள்ள காத்திருந்து 

மரணம் கடந்து

ஜனனம் வென்ற

தாயே!! 


பிஞ்சு விரல் நெஞ்சில் தாங்கி

கைக்குள்ளே எனைக் காத்து

நிலாச் சோற்றில்

பசியாற்றி...

ஊரெல்லாம் துயிலில்

ஒய்யாரமாய் திழைத்திருக்க

இரு விழி இமை மூட அழைத்திருக்கும்

கணம் தனிலும்

எனக்காக விழித்திருக்கும் என் அம்மா!!

நான் வீழ்ந்தால்

தான் துடிக்கும் என் சொந்தம்!! 


சினம் கொண்டு திட்டி

நல் வழியும் காட்டிவிட்டு;

அழும் என்னை

மறுகணமே மடிதந்து

தலை கோதி

அணைத்தெடுக்கும் 

எனக்கான உயிர் ஒன்று!! 


ஏழேழு ஜென்மமதிலும்

நீயே தாயாய் வேண்டும்!!

இறுதி ஜென்மத்தில்

நான் உன் தாயாக வேண்டும்!!

சேவைகள் புரிந்திட !!

கொஞ்சம் சுயநலம் தான் அம்மா!

உன்னைவிட யார் உள்ளார்

வையத்தில் எனை காக்க!! 


தாலாட்டின் சுவை கண்டே

வளர்ந்தவன் அன்றோ!!

இன்றும் எதிர்பார்புக்களே மீதி!!

எக்கணம் என் கடன் தீர்பேன்....... 


நாளொன்று தந்து 

உன் தினமாய் கொண்டால் 

தாழ் செயலாய் நினைகின்றேன் தாயே!!

வாழும் நாட்கள் யாவுமே 

அன்னை உந்தன் நாட்களே!! 


அம்மா;

உனக்கு நிகர் நீயே!!

அந்த கடவுளும் உன் காலடியின் கீழே!! 

@ perawritings 



Monday, October 26, 2020

Walk With Lanka

Restaurants in kandy

2. Dinemore 

The selected comments about "Dinemore" from Random people.

The best place to hangout and have a good meal in kandy. They provide many varieties of food items. All the menu items are tasty & Delicious in affordable price. 
Mainly Their beef and chicken submarines are really nice along with their potato wedges. Food takes about 20 minutes to arrive though.


They maintain Good customer service and clean environment . Recommended for family gatherings, friends meetups and even for official meetings. Parking is available.
Restaurant is situated in a best view point & specially you can enjoy the tremendous view of kandy city in night.

Our rating - 8/10







@perawritings 





 



Photogrphy today

 Nature beauty of kandy🖤

#Hem_Photography

#Hemysphere














@perawritings 

"ரௌத்திரம் பழகு" வழங்கும்..

 தற்கால தமிழர் சமூகத்தில் சாதி!!

தகரென்று கொட்டு முரசே! 
பொய்மைச் சாதி வகுப்பினை யெல்லாம்!!
                                                                             -அமர கவி பாரதியார் 

ஒட்டுமொத்தமாகவே பிரிவினை வாதங்கள் எதிர்க்கப்பட வேண்டியவை தான் என்றாலும் இலங்கை தமிழரின் சாதி தொடர்பான நிலைப்பாடுகள் அவ்வளவு மெச்சிக்கொள்ளும் படியாக இல்லை.. தமிழ்நாட்டைப் போல சாதி தொடர்பான கலவரங்கள், வன்முறைகள், ஆணவக்கொலைகள், இட ஒதுக்கீடு, என வெளிப்படையாக சாதித்தடிப்பு இல்லாதபோதும் முன்பு ஒரு காலத்தில் என ஆரம்பிக்கும் கதைகளில் ஏராளமாக அவை காணக்கிடைக்கின்றன,,


அனைவராலும் அடையக்கூடிய கல்வி முறையால் , நாங்கள் சிறுபான்மை இனத்தவர் என்ற ரீதியில் இன வேற்றுமையை முதன்மையாக முன்னிறுத்துவதால் , புலிகள் காலக் கட்டுப்பாடுகளால் அவை புறக்கணிக்கத்தக்க வகையில் இல்லாமல் ஆக்கப்பட்டிருந்தாலும்,, கல்யாணத்தில் மட்டும் சாதி,, யைத் தீவிரமாகக் கடைபிடிக்கும் வரைக்கும் சாதி தொடர்பான  நிலைபாடு மனதளவில் மாற்றம் காணாது.. பரம்பரை பரம்பரையாக அதை சொல்லிக் கொடுத்துக் கடத்த வேண்டும் என்பதில் இன்றையமக்கள் மிகத் தெளிவாக இருக்கிறார்கள்..


சாதி என்ற ரீதியில் எந்தவிதமான சலுகைகளும் அவர்களுக்கு இக்காலத்தில் கிடைக்காது விட்டாலும், காலம் காலமாக அவர்கள் அனுபவித்து வந்தவற்றை அடுத்த சந்ததிக்கு கடத்தி அறியச் செய்வதில் ஒரு வகையான வீண் பெருமை உணர்வு,, அதாவது இந்தக் காலத்தில் கல்வியில் அல்லது செல்வத்தில் ஒருவன் அவர்களை முந்திச் செல்வானாயின், அந்த ஆற்றாமையை கொஞ்சம் தணித்துக்கொள்ள அவர்கள் பயன்படுத்தும் ஊடகம்.. 


கூடிக்குறையும் சாதிப்படி நிலைகள் வழியே கூட சாதி பற்றிய ஆக்ருதி மாற்றம் காண்பதில்லை.. ஒவ்வொரு சாதியும் அதற்கென சீராக கட்டமைக்கப்‌பட்ட தொழில் முறையை ஆரம்பத்தில் கொண்டிருந்தது போல தடித்தனமும், பெருமையும், அதற்கேற்றால் போல் அவர்களிடம் குடி கொண்டிருக்கிறது.. தனக்கு விழும் அதே அடியை கொஞ்சம் கூட வலிமை குறையாது கீழே இருப்பவனுக்குக் கொடுப்பதற்கு யாரும் தயங்குவதில்லை.. 


யாராவது ஒருவர் வெளிப்படையாகப் பொதுவெளியில் நான் இன்ன சாதி என்று விளம்புவது அநாகரிகமான, ஒவ்வாத நடத்தையாக இக்காலத்தில் அணுகப்படுவது பாராட்டத்தக்க விசயம் என்றாலும், இன்று வரை பத்திரிக்கை திருமண விளம்பரங்களில் சாதியை விபரித்தே வரன் தேடப்படுகிறது.. அதாவது தங்களைப் பகுத்தறிவாளர்களாகவும் வெளியே காட்டிக் கொள்ள வேண்டும் அதே வேளை சாதியையும் காப்பாற்றியாக வேண்டும்.. 


இது தான் மிகவும் அபாயகரமான நிலை.. வெளிப்படையாக சாதி வெறி கொண்டவர்களைக் கூட முறையான கல்வி முறைகளால் திருத்தி விடலாம்.. ஆனால் அனைத்து விளக்கமும் இருந்தும், படித்திருந்தும், அதை மறைமுகமாகத் தீவிரமாக கடைபிடிக்கும் கூட்டம் தான் இக்காலத்தில் அதிகம்.. இவர்களை திருத்தி எடுக்கவே இயலாது, பிழை என்று அறிந்தும் திருத்திக் கொள்ள மனம் இல்லாதவர்கள், வீம்புக்குக் கடைப்பிடிப்பவர்கள் இவர்கள்.. 


சமீப காலமாக காலம் காலமாய் மெருகேற்றப்பட்டு வந்த பகுத்தறிவும் சிந்தனைகளும் சமூகத்தின் கைகளில் தாராளமாக கிடைக்கப் பெற்றதன் பொருட்டு, அநேகமானவர்களின் மூளைக்குள் சாதி ஒழிப்பு பற்றிய புரிதல் விதை தூவப்பட்டு இருந்தாலும் பரம்பரை பரம்பரையாக பின்பற்றப்பட்ட சாதி தொடர்பான நிலைப்பாடு முற்றாக இல்லாது போக குறைந்தது இன்னும் ஐந்து தலைமுறைகள் தேவைப்படும்.. அதுவும் கலப்புத் திருமணங்கள் நடந்தால் ஒழிய.. ஆனால் மொத்த திருமணங்களில் அதன் விகிதம் மிகச்சொற்பம்..


ஏதாவது ஒரு தலைமுறை இனி மேல் நாங்கள் இன்ன சாதி என்று எங்கள் சந்ததிக்குச் சொல்ல மாட்டோம் என்று சங்கல்பம் எடுத்துக் கொண்டால், எந்த விதமான லாபமோ நஷ்டமோ இக்காலத்தில் கிடைக்காது வெறுமனே வீம்புக்குக் கடைப்பிடிக்கப்பட்டு வரும் சாதி தொடர்பான மறைமுகமான நிலைப்பாட்டை இலகுவில் தகர்த்தெறியலாம்.. ஆனால்,,


@perawritings 

"செந்தமிழே" வழங்கும்..

ஈழத் திருநாட்டின் சாபக்கேடு!!

 தாய்ப்பால் வற்றித் தீர

அழும் பிள்ளைக்காய்

மார்பை பிசைந்து - தன்

குருதியை கொடுக்கும்

தாய்மார்கள்!! 


கம்பி முட்களின் எண்ணிக்கை வரை

இலக்கங்களை 

எண்ணப் பழகிக் கொண்ட 

பிஞ்சுக் குழந்தைகள்!! 


கால் இழந்து

கை இழந்து

உடமைகளும் சேர்த்திழந்து

சொந்த நாட்டிலே

அகதி நாமம் பூண்ட

எம் இன மக்கள்!! 


இக் கலியுகத்தின்

சாபக்கேடு!!


@perawritings

Sunday, October 25, 2020

What is Diabetes mellitus?

From " Mad medics" 

Diabetes mellitus: 

diabetes   “to pass through” 

mellitus    “honey” 

 • Diabetes is a condition where  insulin is not produced in sufficient quantities  or works less efficiently at its target sites,  due to Abnormalities of metabolism (fat & protein as well as carbohydrate) ,Resulting in high blood sugar (hyperglycaemia) 

“systemic disease characterised by hyperglycaemia” 


*Clinical presentation - symptoms & signs

1. Thirst 

2. Weight loss 

3. Polyuria 

4. Nocturia 

5. Visual changes 

6. Lethargy 

7. Pruritis vulvae 

8. Balanitis 

9. Neuropathic symptoms (pain, numbness) 


Classification of diabetes 

Type 1 diabetes mellitus 

 

Type 2 diabetes mellitus 

 

Gestational diabetes mellitus 

 

Specific types of diabetes mellitus 


1. Type 1 diabetes mellitus 

Usually presents during childhood or adolescence 

Weight loss, Polyuria, Polydypsia 

Often present with ketoacidosis 

Insulin therapy is essential 

Most due to immune mediated processes 

May be a/w other AI diseases such as Addison’s disease, vitiligo, Hushimoto’s thyroiditid etc. 

Individuals with HLA types DR3 & DR4 of major histocompatibility complex are most at risk .

Autoantibodies found in ~ 90% of cases 

to islet cells (ICA), insulin, tyrosine phosphatases IA-2 and IA-2β and glutamic de-carboxylase 

Idiopathic DM 

not immune mediated  

strongly inherited  

more common in black and Asian people 

Latent Autoimmune diabetes of adults (LADA) 

Latent Autoimmune diabetes of adults 

(LADA) 

Islet antibodies present at diagnosis of diabetes, but progression of autoimmune βcell failure is slow 

Not insulin requiring, at least during the first 6 months after diagnosis  

In phenotypic type 2 diabetes patients 

LADA occurs in 10% of individuals older than 35 years and in 25% below that age 


2. Type 2 Diabetes Mellitus 

A complex heterogeneous group of metabolic disorders including hyperglycemia and impaired insulin action and/or insulin secretion 

 

Spectrum of disorders ranging from mainly insulin resistance with relative insulin deficiency to a predominantly secretory defect with insulin resistance 

Type 2 diabetes mellitus 

~ 90% of all diabetes case 

Onset most usually in adult life 

Familial tendency & an association with obesity 

Spectrum of disorders ranging from mainly insulin resistance with relative insulin deficiency to a predominantly secretory defect with insulin resistance 


Current theories 

defect in insulin-mediated glucose uptake in muscle  

dysfunction of the pancreatic β-cells 

Dysfunctional adipocytes 

impaired insulin action in liver 

~ 90% of all diabetes case 

Onset most usually in adult life 


Etiology is multifactorial 

Genetic background  

environmental factors 

Patterns of inheritance is both polygenic and heterogeneous – i.e. multiple genes are involved and different combinations of genes play a role in different subsets of individuals 


3.Gestational diabetes mellitus 

Diabetes mellitus during  pregnancy,  It can affect your child's health.


4. Other specific types of DM 

Genetic defects of β cell function 

MODY 

Genetic defects of insulin action 

Type A insulin resistance (insulin receptor defect) 

Insulin deficiency due to pancreatic disease 

Chronic pancreatitis, pancreatectomy, haemochromatosis, cystic fibrosis 

Endocrinopathies 

Relative insulin deficiency- acromegaly, Cushing’s syndrome, phaeochromocytoma 

Other specific types of DM ctd. 


Criteria for Diabetes Diagnosis  

•  Hb A1C ≥6.5% (48 mmol/mmol) 

–  Perform in a lab using NGSP-certified method and standardized to DCCT assay  

 

FPG ≥126 mg/dL (7.0 mmol/L) 

Fasting defined as no caloric intake for ≥8 hrs 

 

2-hr PG ≥200 mg/dL (11.1 mmol/L) during OGTT (75-g anhydrous glucose) 

Performed as described by the WHO   

 

•  Random PG ≥200 mg/dL (11.1 mmol/L) 

–  In persons with symptoms of hyperglycemia or hyperglycemic crisis  

In the absence of unequivocal hyperglycemia results should be confirmed using repeat testing  

 


 Categories of Increased Risk for Diabetes (Pre-diabetes)    

•  Impaired Fasting Glucose (IFG)  

–  FPG 100 - 125 mg/dL (5.6 - 6.9 mmol/L)  OR    

•  Impaired Glucose Tolerance (IGT)  

–  2-hr PG in 75-g OGTT 140 - 199 mg/dL (7.8 - 

11.0 mmol/L)  

OR    

•  hbA1C 5.7%-6.4%    

Type 2 diabetes testing should be done in all adults who are overweight or obese (BMI ≥25 or ≥23 in Asian Americans) and have additional risk factors 

Testing should begin at the age of 45 years  

 

Diabetes Risk Factors   

Physical inactivity 

First-degree relative with diabetes 

High-risk race/ethnicity 

Women who delivered a baby >9 lb or were diagnosed with GDM 

HDL-C <35 mg/dL ± TG >250 mg/dL 

Hypertension (≥140/90 mm Hg or on therapy) 

A1C ≥5.7%, IGT, or IFG on previous testing 

Conditions associated with insulin resistance: severe obesity, acanthosis nigricans, PCOS 

CVD history 


Who should be screened?  

Sri Lankan guidelines 

Use opportunistic screening  –  on adults >35 years whenever there is an opportunity 

 • Individuals <35 yrs should be tested if they are at high risk of developing type II diabetes 

Risk factors  

IGT/IFG 

*first degree relatives with diabetes 

Inactive lifestyle or overweight (BMI >25) 

Metabolic syndrome 

Hypertension or dyslipidaemia 

Cardiovascular disease (MI, angina or stroke) & PAD 

PCOD or previous GDM 

H/O having large babies (>3.5 kg) 


Pre-diabetes testing 

To test for pre-diabetes, the HbA1C, FPG, and 2-h PG after 75-g OGTT are appropriate 

 • If tests are normal, repeat testing carried out at a minimum of 3- year intervals is reasonable 

 • In patients with pre-diabetes, identify and, if appropriate, treat other cardiovascular disease (CVD) risk factors 

 • Testing to detect pre-diabetes should be considered in children and adolescents who are overweight or obese and who have ≥2 additional risk factors .

 @perawritings


Walk with lanka

Restaurants in kandy 

1.Route 66

The selected comments about "Route 66" from Random people.


One of the best restaurant in kandy, Sri Lanka. Very chic and cosy place to eat.The ambiance is very calm and a perfect place for a date. The food served is very good, tastes awesome and is served hot. The drinks taste awesome as well . As a plus the prices are super affordable compared to some other places.

Seems suitable for couples who want to spend hours and hours there as it is located in a secretive street and they take hours to serve orders .
There's no parking for obvious reasons but you can park at KCC make the short walk here if you wanna try their version of frozen rolls and a plate of kottu.


Our Rating - 7/10



                              
 
Briyani







@perawritings




Saturday, October 24, 2020

Photography today

 தனிமை தன்னை

தனிமை ஆக்கும் துணைகள்..

#Hem_Photogrphy




@Hemysphere 

தற்கொலை - கவிதைகள்

"ரௌத்திரம் பழகு" வழங்கும்....


 தற்கொலையே!! இது சரியா??

செல்லரித்துப் போன 

சில பக்கங்களுக்காக

முழுப் புத்தகத்தையே

எரித்துத் தள்ளும் உலகு!! 


ஓர் நாள் தீயிட மறந்த 

செல்லரித்த புத்தகம்

இன்னோர் சிறந்த வாசகனுக்கு பொக்கிசமாக மாறவும் கூடும்!! 


விலை மலிந்த தூக்குக் கையிறுகளை 

நிம்மதிக்கு துணைக்கழைக்கும்

மானிடனே!!

உன் வாழ்கைப் புத்தகத்தின் வாசகன்

நாளை கூட உன் அருகில் வரலாம்!! 


கண நேர சிந்தனையில்

தொலை தூர வாழ்கை

கலைந்து விட்ட பின்னர்

ஏன் தொலைத்தோம் என

அழக்கூட கண்ணீர் இருக்காது கண்களில்!! 


உங்கள் வாசகர்களை நோக்கிப் பயணியுங்கள்!!

கறையான்களை விட்டு விடுங்கள்!!

வாசகர்களால் அவை 

தன்பாட்டில் களையப்படும்!! 


வாசகர்களே  உங்களுக்கான 

நல்ல புத்தகங்களை 

பாதுகாத்துக் கொள்வது உங்கள் 

பொறுப்பு!!

எரிந்தபின் அழுது பயன் ஏது??


@perawritings

அப்பா - கவிதை

 "செந்தமிழே" - கவிதைத் தொகுப்பு

அப்பா

தோள்களில் தனையனைத் தாங்கி

தான் பார்த்த உலகை விட

பரந்த உலகினை 

தன் மகன் பார்த்திட

ஆசை கொள்பவன் தந்தை!! 


தன் குருதியை உரமாக்கி

கால்களில் சக்கரங்களைக் கட்டி

மணிகணக்கில் வேலைசெய்து

சேகரித்த செல்வம் எல்லாம்

தனையனவன் உயர்விற்காய்

புன்னகையுடன் 

ஈய்ந்தளிப்பவன் தந்தை!! 


அவன்

ஒரு போதும்

வாரியணைத்து

தன் நெஞ்சினை பிழந்து 

அன்பினை காட்டுவதில்லை!! 


எதிரியாய் வேடம் பூண்டு

கை பிடித்து நடை பழக்கி

தான் இன்றிய வேளைதனில்

தன் தனையனுக்கு

எதிர்வரும் தடைகளை

உதிரிகள் ஆக்க 

ஆவன செய்பவன் - தந்தை!! 


மகனாய் உனக்குத் தொண்டாற்ற

இந்த தனையனுக்கு

ஓர் பிறவி போதாது - அப்பா!!

#father's love🖤



@perawritings

Thursday, October 22, 2020

எங்களிடம் இருந்து........ (From us......)

 சமுகத்தையும் அதில் வலிந்து திணிக்கப்பட்ட கோட்பாடுகளையும் கூண்டில் நிறுத்தி  தோலுரித்து நிதர்சனம் தேடத் தொடங்குகின்ற உங்களுக்கு எங்களிடம் இருந்து நிறம் மாறாத பூக்களின் "ரௌத்திரம் பழகு" 🖤

For Medical writings (மருத்துவ கட்டுரைகளுக்கும் விளக்கங்களுக்கும்)   "Mad Medics"🖤

For political Articles (அரசியல் கட்டுரைகளுக்கு) " Politics today "

For Tourism guides (சுற்றுலாத்துறை வழிகாட்டலுக்கு) "walk with lanka"

தமிழ் இலக்கிய நயத்திற்கு "செந்தமிழே"

For English literature "Shakespeare says "

For Photogrphy  "Photogrphy today"

For food & Restaurants detail "walk with lanka"

Keep supporting us!!


@perawritings



Popular post