மூடத்தனத்தின் உச்சக் கட்டம்!!
#தொடரும்_துயர்கள்
உயிரில் அடங்காத தாகம்
கொஞ்சம் கொஞ்சமாய்
ஊனும் உருகிக் கொண்டிருந்தது!!
கெஞ்சி அழுதாலும்
கொஞ்சிப் பேசி
நிலாச் சோறு ஊட்ட தாயும் இல்லை!!
உரக்க குரலில் "சாப்பிட்டியாடா??"
என வினாத் தொடுக்க தந்தையும் இல்லை!!
கை பிடித்து வழிகாட்ட தமயனும் இல்லை!!
வயிறு காய்யினும் தத்தி விளையாடும்
தங்கை முகம் பார்த்து மகிழ்வதற்கு
வாய்புக்களும் அந்த இறைவன்
விட்டு வைத்ததாக தெரியவில்லை!!
என்புகள் சீராக எண்ணப்படும்!!
வயிற்று குழி உள்நொக்கி சென்று
ஏதோ தேடுகின்றது போலும்!!
கால்களாய் இரு பட்டை விறகுகள்!!
பரிதாபத்திலும் கொடுமை
தன்னிலை எண்ணி கண்ணீர் சிந்த கூட
விழிகள் நீர் இழந்து தவிக்கின்றன!!
மடைத்தனமாய் நாம் விசிறி எறியும்
உணவின் அருமை, துடித்துக் கொண்டிருக்கும் அந்த ஜீவன் உணரும்!!
கல்லொன்றில் சிலைவடித்து
பால் முதல் அறுசுவை
பட்ஷணங்களால் நீராட்டி
வரம் வேண்டும் மூடனே
எனைக் கொஞ்சம் திரும்பிப் பாராயோ
என்றே தான் அவன் நெஞ்சம் ஏங்கும்!!
சுடுகாட்டில் எரிந்த சாம்பலுக்கு
வகை வகையாய் உண்ணப் படைக்கும்
நம் அறிவிழந்த சனத்திற்கு
இல்லாத எனக்கு ஒருவாய் உணவுதர
முடியாத நிலமையா என அவன்
மனசும் தனக்குள் குமுறும்!!
எல்லா குமுறலுடனும்
உயிர்வாடி அவன் ஆவி சோரும்!!
இமை மூடி கண்களும் நீள் துயில் கொள்ளும்!!!
#ஏன்_தானோ_இந்த_நிலமை
மூடத்தன வேடிக்கை செயல்கள்
நம் முன்னோருடன் போகட்டும்!!
அளவுக்கு அதிகமாய் எது இருப்பினும்
இல்லாதவனுக்கு பகிர்தளி!!
நீயே உனக்கு கடவுள்!!
#அப்பாவி_சிறுவனின்_புலம்பல்
@perawritings