My Blog List

Saturday, October 24, 2020

தற்கொலை - கவிதைகள்

"ரௌத்திரம் பழகு" வழங்கும்....


 தற்கொலையே!! இது சரியா??

செல்லரித்துப் போன 

சில பக்கங்களுக்காக

முழுப் புத்தகத்தையே

எரித்துத் தள்ளும் உலகு!! 


ஓர் நாள் தீயிட மறந்த 

செல்லரித்த புத்தகம்

இன்னோர் சிறந்த வாசகனுக்கு பொக்கிசமாக மாறவும் கூடும்!! 


விலை மலிந்த தூக்குக் கையிறுகளை 

நிம்மதிக்கு துணைக்கழைக்கும்

மானிடனே!!

உன் வாழ்கைப் புத்தகத்தின் வாசகன்

நாளை கூட உன் அருகில் வரலாம்!! 


கண நேர சிந்தனையில்

தொலை தூர வாழ்கை

கலைந்து விட்ட பின்னர்

ஏன் தொலைத்தோம் என

அழக்கூட கண்ணீர் இருக்காது கண்களில்!! 


உங்கள் வாசகர்களை நோக்கிப் பயணியுங்கள்!!

கறையான்களை விட்டு விடுங்கள்!!

வாசகர்களால் அவை 

தன்பாட்டில் களையப்படும்!! 


வாசகர்களே  உங்களுக்கான 

நல்ல புத்தகங்களை 

பாதுகாத்துக் கொள்வது உங்கள் 

பொறுப்பு!!

எரிந்தபின் அழுது பயன் ஏது??


@perawritings

No comments:

Post a Comment

Popular post