My Blog List

Monday, November 9, 2020

ரௌத்திரம் பழகு


மூடத்தனத்தின் உச்சக் கட்டம்!!

 #தொடரும்_துயர்கள்

உயிரில் அடங்காத தாகம்

கொஞ்சம் கொஞ்சமாய் 

ஊனும் உருகிக் கொண்டிருந்தது!!

கெஞ்சி அழுதாலும்

கொஞ்சிப் பேசி

நிலாச் சோறு ஊட்ட தாயும் இல்லை!!

உரக்க குரலில் "சாப்பிட்டியாடா??"

என வினாத் தொடுக்க தந்தையும் இல்லை!!

கை பிடித்து வழிகாட்ட தமயனும் இல்லை!!

வயிறு காய்யினும் தத்தி விளையாடும்

தங்கை முகம் பார்த்து மகிழ்வதற்கு

வாய்புக்களும் அந்த இறைவன் 

விட்டு வைத்ததாக தெரியவில்லை!! 


என்புகள் சீராக எண்ணப்படும்!!

வயிற்று குழி உள்நொக்கி சென்று

ஏதோ தேடுகின்றது போலும்!!

கால்களாய் இரு பட்டை விறகுகள்!!

பரிதாபத்திலும் கொடுமை

தன்னிலை எண்ணி கண்ணீர் சிந்த கூட

விழிகள் நீர் இழந்து தவிக்கின்றன!! 


மடைத்தனமாய் நாம் விசிறி எறியும்

உணவின் அருமை, துடித்துக் கொண்டிருக்கும் அந்த ஜீவன் உணரும்!!

கல்லொன்றில் சிலைவடித்து

பால் முதல் அறுசுவை 

பட்ஷணங்களால் நீராட்டி 

வரம் வேண்டும் மூடனே

எனைக் கொஞ்சம் திரும்பிப் பாராயோ 

என்றே தான் அவன் நெஞ்சம் ஏங்கும்!! 


சுடுகாட்டில் எரிந்த சாம்பலுக்கு

வகை வகையாய் உண்ணப் படைக்கும்

நம் அறிவிழந்த சனத்திற்கு 

இல்லாத எனக்கு ஒருவாய் உணவுதர

முடியாத நிலமையா என அவன்

மனசும் தனக்குள் குமுறும்!! 


எல்லா குமுறலுடனும்

உயிர்வாடி அவன் ஆவி சோரும்!!

இமை மூடி கண்களும் நீள் துயில் கொள்ளும்!!! 


#ஏன்_தானோ_இந்த_நிலமை 


மூடத்தன வேடிக்கை செயல்கள்

நம் முன்னோருடன் போகட்டும்!!

அளவுக்கு அதிகமாய் எது இருப்பினும்

இல்லாதவனுக்கு பகிர்தளி!!

நீயே உனக்கு கடவுள்!! 


#அப்பாவி_சிறுவனின்_புலம்பல்

@perawritings 

Saturday, November 7, 2020

ரௌத்திரம் பழகு

சாதியச்  சாபக்கேடு

புதியன புகுந்தன

பழையன கழிந்தன

உடைகளும் மாறின

இருந்தும் பூட்டனின் கிழிந்த வேட்டி

இன்னும்தான் ஓய்வெடுக்கவில்லை!!
ஆம் அந்த சாதி வெறி ஒட்டிய
பட்டுக்கரை வேட்டி!!

றொம்ப பாரம்பரியமானதே!!
இதில் மெய்ப்பொருள் உண்டா??
தேடல் கொண்டது மனது!!
எதார்த்தவாதிகளின்
தேடலில் சிக்கியது என் பூட்டன்!!

வினாக்கள் தொடுக்கப்பட்டன
பூட்டனும் அசராது பதிலாடினான்!!
அந்தக்காலத்தில் செய்யும் தொழிலால்
சாதி ஜெனித்தது என்றான் பூட்டன்!!

எனக்குள் ஒரே குழப்பம்!!
கொஞ்சம் கூடத் தயங்காமல்
இந்த டாக்டர்ஸ்,இஞ்சினியர், போஸ்டுமேன் இவைக்கெல்லாம்
என்ன ஜாதியோ என வினாத் தொடுத்தேன்!!
பூட்டன் சற்றே சிந்தித்தான்!!

சிந்தனை தெளிய முன்னமே
நான் உன் சாதியா என உரத்து
மொழிந்தேன்!
சற்றும் தயங்கா பூட்டனே
நீ என் சாதிடா என்றான்!!

புன்னகை பூத்தே;
பூட்டா நீ செய்த தொழில் வேறு!!
பாட்டன் செய்த தொழிலும் வேறு!!
என் அப்பன் செய்கின்ற தொழிலும் வேறு!!
நான் செய்ய போகும் தொழிலும் வேறு!!
நான் உன் சாதி என்று
நீ சொன்னால்
நான் என் செய்வேன் சொல்!!
பூட்டன் வாயடைத்தான்!!

பூசை செய்தல் பூப்பறித்தல்
மீன்பிடித்தல் தவிலடித்தல் என
சாதி பிரித்த மூடப் பழசுகளே!!
இன்றய மனிதன்
தனியாளாய் இவற்றை செய்து தள்ளுகின்றான்!!
எங்குபோய் அவனில் தேடுவீர்
உங்கள் சாதிச் சாயத்தை!!

நவீனம் பூப்பூத்த காலத்தில்
இயந்திரமாய் மனிதன் பணம் தேடும் வேகத்தில்
மேலான தொழில் என்ன ???
கீழான தொழில் என்ன???

"செய்யும் தொழிலே தெய்வம்"
எனின் அத் தெய்வத்தின் சாதி என்ன??

ஈன முண்டங்களே!!
யாவரும் சமத்துவம்!!
இதற்குத்தான் கட்சி அரசியலும்!!
தேர்தல் ஓட்டுருமையும்!!
இதில் கூட சாதிக் கட்சி திறக்கும் உங்களை என் செய்வேன் சொல்!!

வழக்கொழிந்த உங்கள் சாதியும்
வெக்கித் தலை தாழ்த்தும்!!
மனிதத்துள் புனிதத்தை தேடும்
மனங்களிலும்
உங்கள் சாதிக்கரி பூசி
நஞ்சை விதைக்காதீர் நாளைய இளைஞனுக்கு!!

மண்ணோடு புதையட்டும் மதம் கொண்ட சாதி!!
பிடி சாம்பல் ஆகட்டும் சாதி சுமக்கும்
கட்டாக்காளி மாடுகள்!!

நாளைய உலகு மனிதத்தை மதிக்கட்டும்!!
அன்பினை துதிக்கட்டும்!!
கிழிந்த பட்டுக்கரை வேட்டி
காற்றோடு பறக்கட்டும்!!
உன்னதமாய் சந்தனத் தென்றல்
சாதிச்சாயம் மீறி வீசட்டும்!!

#மனிதமே_முதல்_அடையாளம்_மனிதனுக்கு!! 
@perawritings 

Wednesday, November 4, 2020

செந்தமிழே

 #கனா

உன் மடி மீது

என் தலை சாய்த்து

உன் விரல் கொண்டு

தலை கோதி

கண் தூங்கும் 

சிறு பொழுது 

தினம் எதிர்பார்க்கும்

என் மனது

வாழ்நாள் முழுதும்........❤ 


நெடுந் தூரம்

கை கோர்த்து

தோள் ஓரம் உனை சாய்த்து

நம் நடை தொடரும் பொழுதெல்லாம்

முழு நேரம் கனா கண்டே

இந் நேரம்

சுழல்கின்றது........❤

உன் நினைவுளில்

உறைகின்றது......❤

@perawritings 

Monday, November 2, 2020

செந்தமிழே

 கர்வம்_ஒழிந்ததடி

மாலை மயங்கிக் கொண்டிருக்கும்

அந்த அத்திப் பொழுது!!

மரத்தின் நிழலில் தலை சாய்த்தே

நின்னவள் வருகைக்காய்

விழிகளும் வழி பார்த்தே 

தவம் கிடந்தன!! 


தென்றலின் தேடலில்

அகப்பட்ட உதிர் இலைகள்

மெது மெதுவாக எனை வருடவே அவற்றை எண்ணிய படி

பொழுது புலர்ந்தது!! 


தூரத்தே ஓர் சலசலப்பு!!

முக வியர்வை கண்ணோரமாய்

கன்னம் வருட - உடுத்திருக்கும்

உடைதனிலே அவை மோட்சம் பெறவே

மின்னல் நடையில்

சற்றே பதற்றத்துடன்

தேவதையவள் விம்பம்!! 


ஏக்க மிகுதியில் கண்கள் கலங்கி

நெற்றிப் பொட்டு சற்றே தளர்ந்திருக்க

பெண்ணழகின் மொத்தமுமாய்

என் தமிழிச்சி விழி சிமிட்டி

எனை அடைந்தாள்!! 


இதழ் புரியாத புன்னகையும்

விழி புரிந்ததால் ஏனோ நானும் 

எனை இழந்தேன் அன்றோ!! 


கட்டியணைக்க கைகளும்

கன்னம் வருட இதழும்

மனதின் அனுமதிக்காய்

காத்துக் கிடந்தன அடிமை போல்!! 


காத்திருந்து சுவை கொண்ட மனமோ

ஈகோவில் முகம் சுழித்து 

அவள் முன்

நாடகம் நடத்தியதே!!

நின்னவளும் கலங்கித்தான்

எனைப் பார்த்தாள்!! 


அவள் மொழிகள் தடுமாற தொடங்கின!!

ஏக்க மிகுதியில் புலம்பினாள்!!

என் காதுகளோ தன் புலன் மறந்து

கண்களுக்கு உயிர் கொடுத்தன!!

அவள் இதழ் அசைவை சிறை பிடித்தன!! 


மொழி கேளாமலே உன் இதழுக்கு

அடிமையாகினேன் சகி!!

"உயிர் பறித்தே என்னை

உன் உதட்டின் ஓரம் புதைத்து விடு"

மனதும் ஏங்கியது!! 


எல்லா வேசமும் கலைந்துபோய்

புலம்பிய அவள் இதழோரம்

இதழ் பதித்தேன்!!

மௌனங்கள் மொழிகள் ஆக

தனை மறந்தே அவள் என்னுள்

உறைந்தாள்!! 


மறுபடியும் உன் தாமதம்

எதிர் பார்தே காத்திருக்கும் என் மனது!! 


உன் இதழசைவில் என் உசிரலைய கர்வம் ஒழிந்ததடி!!!


@perawritings 

செந்தமிழே

 நட்பு 

துரியோதனனுக்கு 

கர்ணன் ஆக வேண்டாம்!!

அர்ஜுனனுக்கு 

கிருஷ்ணன் ஆக வாருங்கள்!! 


என் அருகில் அல்ல

மனதில் இடம் தருகின்றேன்!! 


படைத்தவன் கற்பனையை விஞ்சிய

அழகிய உலகம்

நட்பு!!


@perawritings 

Popular post