My Blog List

Thursday, October 29, 2020

ரௌத்திரம் பழகு

இப்படிக்கு கடவுள் 

 கருங் கற்களுக்கும்

மண் கட்டிகளுக்கும்

போட்டோ பிறேம்களுக்கும்

பாலாலும் தேனாலும்

பட்சணங்களாலும்

பொய்யாக அர்ச்சித்து 

மறு நொடியே

எனக்கானவற்றை

நீங்களே உண்டு

கழிக்கின்றீர்கள்!! 


நான் மட்டும்

நீங்கள் மெய்யென நம்பும்

வாழ்க்கைக்கு

வானத்தில் இருந்து குதித்து

அருள் புரிய வேண்டுமா?? 


உங்கள் வியாபார உத்தி கண்டு

மெய் சிலிர்த்து போகின்றேன்!! 


மாயையின் பின் அலையும்

மானிடனே!!

பொய்யான அர்சித்தலை விடுத்து

உன் முகம் முன் தோன்றும்

உயிர்களை அன்பால் 

அர்சிக்கப் பழகு!! 


வாழும் உங்களில்

என்னை காண பழகுங்கள்!!

கருங்கற்களிலோ மண்கட்டிகளிலோ

போட்டோ பிறேம்களிலோ அல்ல!! 


                இப்படிக்கு,

                கடவுள்!!


@perawritings 

No comments:

Post a Comment

Popular post